Corona Updates: தொடர்ந்து 5வது நாளாக புதிய பாதிப்பை விட மீட்பு விகிதம் அதிகம்

நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த வாரம் 21.9 சதவீதமாக இருந்தது, தறோது அது 19.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கோவிட் -19 மீட்பு விகிதம் 83.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2021, 04:48 PM IST
  • தொடர்ந்து 5வது நாளாக கொரோனாவின் புதிய பாதிப்பை விட மீட்பு விகிதம் அதிகம்
  • 21.9 சதவீதத்தில் இருந்து 19.8 சதவீதமாகக் குறைந்துள்ளது
  • நாட்டின் ஒட்டுமொத்த கோவிட் -19 நிலைமை சீராகி வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்தார்
Corona Updates: தொடர்ந்து 5வது நாளாக புதிய பாதிப்பை விட மீட்பு விகிதம் அதிகம் title=

புதுடெல்லி: உலக அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை 16.31 கோடியை கடந்தது. 

தற்போது சற்றே ஆசுவாசம் தரும் விதமாக இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மட்டுப்பட்டுள்ளது. அதாவது, புதிய பாதிப்புகளை விட மீட்பு விகிதம் அதிகமாக இருப்பதாக அரசு கூறுகிறது. 

நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த வாரம் 21.9 சதவீதமாக இருந்தது, தற்போது அது 19.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கோவிட் -19 மீட்பு விகிதம் 83.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Also Read | தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் 3.62 லட்சம் பேர் கொடிய கோவிட் நோயில் இருந்து குணமாகியுள்ளனர். அதே நேரத்தில் புதிய பாதிப்பு 3.10 லட்சம் என்பது சற்றே ஆறுதல் தரும் செய்தி. நேற்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய நிதி ஆயோக் (NITI Aayog) உறுப்பினர் வி கே பால், நாட்டின் ஒட்டுமொத்த கோவிட் -19 நிலைமை சீராகி வருவதாகவும், மேலும் நிலைமை விரைவில் மேம்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் 10 மாநிலங்களில் மட்டுமே 85 சதவிகித கொரோனா பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் (coronavirus) பாதிப்பு பதிவாகியுள்ளன. 

Also Read | தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்

24 மாநிலங்களில் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக COVID-19 தாக்கம் உள்ளது. டெல்லி, சத்தீஸ்கர், தமன் & டியு, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் (Delhi, Chhattisgarh, Daman and Diu, Haryana, Madhya Pradesh) ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. 

“தொற்றுநோயின் இரண்டாவது அலையை ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தும் கட்டத்திற்கு வந்துவிட்டோம். இது ஒருசில மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. ஆனால் சில மாநிலங்களில் கவலை தரும் போக்கே நிலவுகிறது.  சிலவற்றில் கோவிட் அதிகரித்து வருகிறது. 

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தின் போக்கு கலவையாக உள்ளது என்றாலும், ஒட்டுமொத்தமாக, நிலைமை மேம்பட்டு வருகிறது. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால்  இந்த தொற்றுநோயின் தாக்கத்தை விரைவில் வீழ்ச்சியடையச் செய்வோம்” என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ மேற்கோளிட்டுள் நிதி ஆயோக் (NITI Aayog) உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார். 

Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News