டெல்லியில் கடும் புகைமாசு: 41 ரயில்கள் தாமதம், 10 ரத்து!!

Updated: Nov 9, 2017, 10:03 AM IST
டெல்லியில் கடும் புகைமாசு: 41 ரயில்கள் தாமதம், 10 ரத்து!!

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிமூட்டம் மற்றும் புகை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். 

டெல்லி விமான நிலையத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதை காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் விமானங்கள் புறப்பட தாமதமானது. 

மாசு அளவை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கார்களை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே இயக்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில் மற்ற பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் 41 ரயில்கள் வழக்கத்தை விட மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன. புகை மாசு காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.