டெல்லியில் பட்டாசு விற்பனை தடை தொடரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated: Oct 13, 2017, 02:28 PM IST
டெல்லியில் பட்டாசு விற்பனை தடை தொடரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Zee Media

டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், இது சம்பந்தமான வழக்குகளை நவம்பர் முதல் வாரம் தள்ளி வைக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.