டெல்லியில் காற்றின் தர குறியீடு! அவதியில் மக்கள்!

வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Updated: Jun 14, 2018, 08:54 AM IST
டெல்லியில் காற்றின் தர குறியீடு! அவதியில் மக்கள்!
File photo

வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வீசும் புழுதி புயல் காரணத்தால் டெல்லியின் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதையும் தாண்டி 787ஆக உள்ளது. மேலும் காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது.