பண மதிப்பிழப்பை செயல்படுத்தி ஓராண்டு: ராகுல் கருத்து!!

Updated: Nov 8, 2017, 10:44 AM IST
பண மதிப்பிழப்பை செயல்படுத்தி ஓராண்டு: ராகுல் கருத்து!!

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

பண மதிப்பிழப்பு ஒரு சோகம். பிரதமரின் சிந்தனையற்ற செயல். இந்த சிந்தனையற்ற செயலால் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நேர்மையான கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்கம் நாங்கள் நிற்ப்போம். என தெரிவித்துள்ளார்.