என் கைதுக்கு டிரம்ப்-மோடியின் நட்புதான் காரணம்: ஹபீஸ் சயீத்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேற்று இரவு ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார் அதில் இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பினால் லாகூரில் வீட்டுக் காவலில் என்னை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Last Updated : Jan 31, 2017, 10:07 AM IST
என் கைதுக்கு டிரம்ப்-மோடியின் நட்புதான் காரணம்: ஹபீஸ் சயீத் title=

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேற்று இரவு ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார் அதில் இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பினால் லாகூரில் வீட்டுக் காவலில் என்னை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

சயீத் மற்றும் நான்கு பேரை நேற்று இரவு பஞ்சாப் மாகாணத்தில் காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஹபீஸ் சயீத், லாகூரில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இவரது தீவிரவாத அமைப்புக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பாகிஸ்தானின் சட்ட அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சயீத், 6 மாத காலத்திற்கு வீட்டு சிறையில் வைக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே சயீத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்புக்கு வந்துள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவின்பேரில் பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இந்திய பிரதமர் மோடி தனக்கு டிரம்பிடம் உள்ள நட்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசை பணிய வைத்துவிட்டதாகவும், மோடி-டிரம்ப்பின் நட்பு காரணமாகவே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை நேற்று ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஹபீஸ், லாகூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Trending News