Aadhar இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!

மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது. 

Last Updated : Feb 20, 2018, 12:33 AM IST
Aadhar இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்! title=

மத்திய கல்வி வாரியம் (CBSE) ஆனது 2018-ஆம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி(NEET) தேர்விற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் என அறிவித்தது. 

ஆனால் இந்த அறிவிப்பில் பல குழப்பங்கள் நிலவியது, காரணம் ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மக்கள் ஆகியோர்களால் ஆதார் அட்டையினை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கையில் NEET தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற குழப்பம் நிலவியது.

இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு விடையளிக்கு வகையில், ஆதார் இல்லாமலும் NEET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி ஆதார் அட்டை இல்லாத ஜம்மு-காஷ்மீர், மேகாளயா, ஆஸாம் மாநில மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க ஒப்புதல் பெற்ற ஒரு அடையாள ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம் எனவும். மற்ற மாநில மாணவர்கள் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட UIDAI  கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் "NEET (UG) -2018 விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க ஆதார் எண் தேவைபடுகிறது எனவும், NEET (UG) -2018 -க்கான தேரவாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் தேர்வாளரின் விவரங்களை துல்லியமாக கண்டறியவும் ஆதார் எண் அவசியம் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தேர்வின் போது தேர்வாளர்களை அடையாளம் கண்டு உறுதி படுத்திக்கொள்ள இந்த முறை பயன்படுத்தப்படும் எனவும் NEET (UG) -2018 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

NEET தேர்வாளரா நீங்கள், அப்படியென்றால் இதை கவணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  • ​​ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தில் நகல் குறைந்தப்பட்சம் 3 கையில் வைத்துக்கொள்ளுங்கள்!
  • கட்டணம் செலுத்தியதற்கான சான்று (அதாவது உறுதிப்படுத்தல் பக்கத்தின் மூலம் ஆதரிக்கப்படும் வங்கி பரிவர்த்தனை விவரங்கள்).
  • ஒத்த பாஸ்போர்ட் அளவு கொண்ட குறைந்தது 5 புகைப்படம், அதேப் புகைப்டத்தினை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்றவாறு மென் நகல் (Scan Copy)
  • J & K மாநிலத்தை சேர்ந்த தேர்வாளர்களை பொறுத்தவரை, அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தேர்வாளர்களை பொறுத்தவரை அகில இந்திய அளவிலான 15% ஒதுக்கீட்டிற்கான சுய பிரகடனத்தை உருவாக்கிய அமைப்பு.(குறிப்பு: முன்னதாக் இம்மாநில மாணவர்களிடம் இருந்து இச்சான்று கோரப்படவில்லை)

Trending News