6 மாதமாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது...!

உ.பி-யில் புதன நகரில் கடந்த ஆறுமாதமாக தனது பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....! 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 14, 2018, 12:37 PM IST
6 மாதமாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது...!
ZeeNewsTamil

உ.பி-யில் புதன நகரில் கடந்த ஆறுமாதமாக தனது பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....! 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புதன நகரில் கடந்த ஆறு மாதமாக ஒரு சிறுமி தனது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரின் தாய் காவல்துறையில் புகார் செய்துள்ளார். 

இதை தொடர்ந்து, கணவர் மனைவி மற்றும் மகள் இருவரையும் வெளியில் சொல்லினால் கொன்று விடுவதாக இருவரையும் அட்சுருத்தியுள்ளார். எதற்கும் அஞ்சாத அந்த சிறுமியின் தாய் காவல்துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார். இதையடுத்து, இவர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

மேலும், அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.