ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து: 3 பெண்கள் பலி- மக்கள் அச்சம்!!

ஜெய்ப்பூர் சிலிண்டர் தீ விபத்தினை தொடர்ந்து நேற்று இரவு குஜராத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

Updated: Jan 13, 2018, 10:11 AM IST
ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து: 3 பெண்கள் பலி- மக்கள் அச்சம்!!
ANI

ஜெய்ப்பூர் சிலிண்டர் தீ விபத்தினை தொடர்ந்து, நேற்று இரவு குஜராத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஷாஃபிர் ஷிபிர் நகரில் நேற்று இரவு தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 3 பெண்கள்  உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.