நடிகை தீபிகா படுகோனின் மும்பை வீட்டில் திடீர் தீவிபத்து!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபலங்கள் பலர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது!

Updated: Jun 13, 2018, 05:45 PM IST
நடிகை தீபிகா படுகோனின் மும்பை வீட்டில் திடீர் தீவிபத்து!
Pic Courtesy: twitter/@ANI

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபலங்கள் பலர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது!

மும்பையின் வோர்லி பகுதியில் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரது வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 33-வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

வோர்லியின் பிரபாதேவி என்னும் இடத்தில் இருக்கும் பியல் மாண்டெ என்ற பல அடுக்கு மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் இக்கட்டிடத்தின் 33-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு 6 பேர் கொண்ட தீயணைப்பு குழு சென்றது.

ஸ்கை லிஃப்ட் என்ற உயர் ரக ஹைட்ராலிக் ஏணியும் வரவழைக்கப்பட்டு குடியிருப்பில் இருந்தவர்களை இக்குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். இச்சம்பவயத்தில் அச்சப்படும் வகையில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள், மீட்பு நடைபெற்று வருகின்றன. 

சம்பந்தப்பட்ட குடியிருப்பின் 26-வது மாடியில் நடிகை தீபிகா படுகோன் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல திரையுலக பிரபலங்களும் இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பதாகவும் தெரிகிறது.