Pegasus விவகாரம்: அவையில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட TMC MP இடைநீக்கம்

நேற்று பெகாசஸ் (pegasus) விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ​​தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 01:21 PM IST
Pegasus விவகாரம்: அவையில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட TMC MP இடைநீக்கம் title=

புதுடெல்லி: நேற்று பெகாசஸ் (pegasus) விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ​​தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் பெருத்த கூச்சலும், குழப்பமும் நிலவியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்தார். 

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெகாசஸ் அறிக்கையை பறித்துக் கிழித்த மோசமான நடவடிக்கை காரணமாக, மாநிலங்கள் அவையில் மழைக்கால கூட்டத் தொடரின்  மீதமுள்ள காலத்தில், கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வி. முரளீதரன் இதற்கான் தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, எம்பி சென் அவர்களை சபையை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

நேற்று அவையில் நடந்த கீழ்தரமான நிகழ்வுகளால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக நாயுடு கூறினார். "இதுபோன்ற நடவடிக்கைகள் நமது நாடாளுமன்றம், ஜனநாயகம் மீதான தெளிவான தாக்குதலாகும்" என்று அவர் கூறினார். "சந்தானு சென், தயவுசெய்து அவையிலிருந்து வெளியேறுங்கள். சபையை செயல்பட அனுமதிக்கவும்" என்று அவைத் தலைவர் கூறினார்.

ALSO READ | Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்

இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் (pegasus) மூலம் இந்தியர்களை உளவு பார்த்ததாக கூறப்படுவது குறித்து கூறிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு சற்று முன்னர் இதுபோன்ற விவகாரம் பேசப்படுவது, இந்திய ஜனநாயகத்தின் பெயரை களப்படுத்தும் சதி திட்டம் ஆகும்.  நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு முறைமை இருக்கும் போது சட்டவிரோத கண்காணிப்பு சாத்தியமில்லை என்று கூறினார்.

ALSO READ | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News