மக்கள் சேவையே அரசின் முக்கிய நோக்கம்: பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயனத்தில் இரண்டாம் நாளான இன்று ஷகன்ஷக்பூர் கிராமத்தில் கழிவறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

Last Updated : Sep 23, 2017, 02:44 PM IST
மக்கள் சேவையே அரசின் முக்கிய நோக்கம்: பிரதமர் மோடி! title=

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயனத்தில் இரண்டாம் நாளான இன்று ஷகன்ஷக்பூர் கிராமத்தில் கழிவறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்று சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி நேற்று வாரணாசி வந்த பிரதமர் இரண்டாவது நாளான இன்று வாரணாசியில் உள்ள ஷகன்ஷக்பூர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கழிவறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் இவருடன் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் உடன் இருந்தார்.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து, விலங்குகள் மருத்துவ முகாமினையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியிர் இவர் மக்களிடம் பேசியதாவது:-

விலங்குகள் மருத்துவ முகாமை நடத்திய உத்தரப்பிரதேச அரசிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விலங்குகளின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது பாராட்டுக்கு உரிய செயலாகும். இதனால் விவசாயிகள் அதிக நன்மைகள் பெற வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

மேலும் ’தேர்தலில் வெற்றி என்பது எங்கள் இலக்கு அல்ல, மாறாக நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே தங்களது அரசின் முக்கிய நோக்கம் ஆகும்’ எனவும் தெரிவித்தார்.

Trending News