ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன!

Updated: May 19, 2017, 09:16 AM IST
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன!

ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஸ்ரீநகரில் நடைப்பெற்றது.

இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 81% பொருட்களுக்கு 18% வரை வரி விதிக்கப்பட உள்ளது. 

அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விலை குறையும் பொருட்கள் விவரம்:-

கூந்தல் எண்ணெய், சோப்கள், டூத்பேஸ்ட் உள்ளிட்டவைகள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. 

மின் உற்பத்திக்கு பயன்படும் நிலக்கரி மீதான வரி 11.69 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. 

பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மீதான வரி 31-32 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. டீ, காபி ரகங்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.

விலை அதிகரிக்கும் பொருட்கள் விவரம்:- 

350 சிசி திறன் கொண்ட பைக்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. சொகுசு வாகனங்களுக்கு கூடுதலாக 15 சதவீதம் வரியும், சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வரியும், சிறிய ரக டீசல் கார்களுக்கு 3 சதவீதம் வரியும் விதிக்கப்பட உள்ளது.

தங்கம், பிஸ்கெட்கள், பிராண்டட் பருப்புக்கள், காலணிகள், பீடி, டெக்ஸ்டெய்ல்ஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி குறித்து, 2 வது நாளாக நடக்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. 

மேலும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு பெறும் பொருட்கள் குறித்தும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.