நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு GST வரி குறைப்பு!

நூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் மாற்றியமைப்பு!!

Last Updated : Jul 22, 2018, 11:08 AM IST
நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு GST வரி குறைப்பு!  title=

நூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் மாற்றியமைப்பு!!

ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்றுவது குறித்து 9 மணி நேரமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் பியூஸ்கோயல், சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கற்கள், மார்பிள் கற்கள், மற்றும் மரச்சிலைக்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது என்று கூறினார்.

ஆயிரம் ரூபாய் வரையிலான ஷூக்கள், இறக்குமதி யூரியா உள்ளிட்ட பொருட்கள் 5 விழுக்காடு ஜி.எஸ். டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவதாகவும்,  நகைப் பை, நகைப்பெட்டி, அலங்கார கண்ணாடி ஆகியவை 12 விழுக்காடு வரி வரம்புக்குள் மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

லித்தியம் அயன்பேட்டரி, கிரைண்டர், மிக்சி, வாட்டர் கூலர் ஆகியவற்றுக்கு 18 விழுக்காடு வரி என்றும்  பியூஸ்கோயல் கூறினார். ஜி.எஸ்.டி சிறப்புக்கூட்டம் ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News