‘இந்து பாக்கிஸ்தான்’ சர்ச்சை: சசி தரூருக்கு BJP கறுப்புக் கொடி!

இந்து பாகிஸ்தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கேரளாவில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் இன்று கருப்பு கொடி காட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jul 18, 2018, 10:55 AM IST
‘இந்து பாக்கிஸ்தான்’ சர்ச்சை: சசி தரூருக்கு BJP கறுப்புக் கொடி! title=

இந்து பாகிஸ்தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கேரளாவில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் இன்று கருப்பு கொடி காட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சசி தரூர், ``2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெற்றால் இந்திய நாடு, `இந்து - பாகிஸ்தானாக மாறிவிடும்'. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் எதற்காகப் போராடினார்களோ.... அது, இல்லாமல் போய்விடும். 

மேலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. வெற்றிபெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து போய்விடும்; புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும்; இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும்'' என்று பேசியிருந்தார். 

இது, நாட்டு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், ``சசி தரூரின் பேச்சுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்றது. இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவுசெய்த சசி தரூர், பி.ஜே.பி-யினர் மீது குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், நேற்று (17-ம் தேதி) கேரளாவின் பச்சலூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற சசி தரூருக்கு எதிராகப் பி.ஜே.பி. தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி கோஷம் எழுப்பினர். எனினும், போராட்டக்காரர்கள் சசி தரூரை நெருங்கவிடாமல் போலீஸார் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டனர். 

இதையடுத்து, தொடர்ந்து பேசிய சசி தாரூர் கூறியதவாது...! ஏன் நான் பாகிஸ்தான் செல்ல வேண்டும். நான் அவர்களைப் போன்ற ஒரு இந்து அல்ல, நான் நாட்டில் தங்குவதற்கு உரிமை இல்லை என்று முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை அளித்தவர் யார்? என திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். 

 

Trending News