துவங்கியது ’ஹாட் ஏர் பலூன்’ திருவிழா!

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகே, அருக் பள்ளத்தாக்கு பகுதியில் ’ஹாட் ஏர் பலூன்’ விழா சிறப்பாக துவங்கப்பட்டது. 

ANI | Updated: Nov 14, 2017, 02:14 PM IST
துவங்கியது ’ஹாட் ஏர் பலூன்’ திருவிழா!
Pic Courtesy: @ANI

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகே, அருக் பள்ளத்தாக்கு பகுதியில் ’ஹாட் ஏர் பலூன்’ விழா சிறப்பாக துவங்கப்பட்டது. 

இன்று (செவ்வாய்) தொடங்கி, மூன்று நாள் நீடிக்கும் இந்நிகழ்வில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து 13 நாடுகள் பங்கேற்கிறது.

ஹாட் ஏர் பலூன் திருவிழா சுற்றுலாவிற்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைகிறது. இந்த நிகழ்வால் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் போன்றவ வெளிநாட்டவர்களால் அறியப்படும் என நம்பப்படுகிறது.

எனினும் இவ்விழாவினால் விபத்துக்கள் ஏற்பட சாத்தியம் பெரும்பான்மை உள்ளது என மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.