ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: BJP MLA!

வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.

Last Updated : Nov 9, 2018, 08:36 AM IST
ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: BJP MLA! title=

வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.

வரும் டிசம்பா் 11-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டிகள் நிலவுகின்றன. 

இந்நிலையில் தென் மாநிலமான ஹைதராபாத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படுமென்று கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங், கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ஹைதராபாத் முன்னதாக பாக்யநகராக தான் இருந்தது. 1590-ம் ஆண்டு இங்கு வந்த குலி குதுப் ஷா, பாக்யநகரை ஹைதராபாத் என மாற்றினார். தற்போது நாங்கள் ஹைதராபாத்திற்கு மறுபெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம்

தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் எங்களது முதல் நோக்கம் மாநிலத்தை முன்னேற்றுவது. இரண்டாவதாக ஹைதராபாத்திற்கு பாக்யநகர் என பெயர் சூட்டுவது தான். அதோடு செகந்திராபாத் மற்றும் கரீம்நகருக்கும் மறுபெயர் சூட்டுவோம்" எனக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது பாஜக எம்.எல்.ஏ. வின் இந்த பெயர் மாற்ற அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News