'நான் எப்போதும் கதாநாயகனாக நடிக்க விரும்பவில்லை' :யோகிபாபு விளக்கம்...

என் முகம் ஹீரோவுக்கான முகமில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு....!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 11, 2018, 05:06 PM IST
'நான் எப்போதும் கதாநாயகனாக நடிக்க விரும்பவில்லை' :யோகிபாபு விளக்கம்...
Representational Image

என் முகம் ஹீரோவுக்கான முகமில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு....!

காமெடியனாக இருக்கும் நடிகர்கள், பின் ஹீரோவாக அறிமுகமாவது தமிழ் சினிமாவில் புதிது அல்ல. தமிழ் திரையுலகில் சந்தானம் போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் நாயகனாக நடித்து தங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் ஒரு மத்திப்பை ஏற்படுத்துகின்றனர். 

சமீபகாலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகி வரும் காமெடி நடிகர் யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின் 'மோஸ்ட் வான்டட்' நடிகராக மாறிவிட்டார். இந்நிலையில் யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் பல தகவல் வெளியானது. சமூக வலைதளத்தில் இந்த செய்தி வைரலாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என் முகம் ஹீரோவுக்கான முகமில்லை என்றும்  கதாநாயகனாக நடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

நயன்தாராவின் கோலமவுக் கொக்கிலாவில் யோகி பாபுவின் கதாபாத்திரம் குறித்து அவரை பாராட்னர். பரியேரும் பெருமாள், விஸ்வாசம், சர்க்கார், 100% காதல் மற்றும் இன்னும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close