வெளியானது CISCE 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE  10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

Updated: May 14, 2018, 05:59 PM IST
வெளியானது CISCE 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
Representational Image

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE  10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில் 10-ஆம் வகுப்பு தேர்வினை பொறுத்தவரை சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

  • http://www.cisce.org/ எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் Result எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.
  • அல்லது Result எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close