ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை வரவேற்ற இந்தியா

ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை குறித்து ஆராய்ந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2018, 05:36 PM IST
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை வரவேற்ற இந்தியா title=

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதையும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாகவும் கூறி ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவை வெளியேறியது. அதன் பின்னர் அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமில்லாமல், தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் கூறியுள்ளது. ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என மிரட்டி வருகிறது. 

ஈரான் நாட்டிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேன்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது. ஈரானிடமிருந்து முற்றிலும் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தக்கொள்ள ஆறு மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறியதாவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்ததைக் குறித்து ஆராய்ந்து வருவதாகவும். அமெரிக்காவின் இந்த முடிவை இந்தியா வரவேற்பதாகவும் கூறினார்.

 

Trending News