சென்னை விமானங்கள் உள்பட 47 IndiGo விமான சேவைகள் ரத்து!

சென்னை உள்பட தென்னிந்தி நகரங்களுக்கு பயணிக்கும் 47 விமான சேவைகளை IndiGo நிறுவனம் ரத்து செய்துள்ளது!

Updated: Mar 13, 2018, 01:50 PM IST
சென்னை விமானங்கள் உள்பட 47 IndiGo விமான சேவைகள் ரத்து!
Zee Media

சென்னை உள்பட தென்னிந்தி நகரங்களுக்கு பயணிக்கும் 47 விமான சேவைகளை IndiGo நிறுவனம் ரத்து செய்துள்ளது!

நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA ,  தவறுதலான பிராட் & விட்னி இயந்திரங்களுடன் வெளிவந்த தனது A320Neo விமானங்களை தரையிரக்கியதினை அடுத்து IndiGo நிறுவனம் தனது 47 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

மார்ச் 13 நாளான இன்று IndiGo நிறுவனம் தனது 47 உள்ளூர் விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பாட்ன, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், கௌகாத்தி உள்பட அண்டை நகரங்களுக்கு செல்லும் விமான சேவையினை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் காலை அகமதாபாத்திற்கு சென்ற விமானம் ஆனது பழது காரணமாக கிளம்பி 40 நிமிடங்களில் நடுவானில் இருந்து லக்னோ-வில் தரையிரக்கப்பட்டது.

பாதுகாப்பு நலன் கருதி ESN 450 க்கு அப்பால் PW1100 இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட A320 Neos விமானங்களை உடனடியாக தரையிரக்க வேண்டும் என நேற்று விமான சேவை பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்ததே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதேப் போன்ற என்ஜின் கோளாரு காரணமாக மட்டும் 3 விமானங்கள் திடீரென தரையிரக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1000 விமானங்களை கொண்டு தினமும் விமான சேவைகளை வழங்கி வரும் IndiGo நிறுவனத்தின் 11 விமானங்களின் சேவையானது நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close