பயணியை தாக்கிய இண்டிகோ ஊழியர்கள்- Video

Updated: Nov 8, 2017, 11:49 AM IST
பயணியை தாக்கிய இண்டிகோ ஊழியர்கள்- Video

கடந்த அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கிய ராஜிவ் கட்டியால் என்றவருக்கும், ஊழியர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் காரணமாக ராஜிவ் கட்டியாலை, பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்சில் ஏற விடாமல் ஊழியர்கள் இருவரும் தடுத்துள்ளனர். இதனால் ஊழியர்களுக்கும் ராஜிவ் கட்டியாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை சக ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வீடியோ பார்க்க:-

 

 

தற்போது இந்த சம்பவத்திற்காக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், சட்டரீதியான புகார் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பயணியிடம் கோரியுள்ளது. பயணியை தாக்கிய இரண்டு ஊழியர்களையும் இண்டிகோ நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.