இஸ்ரோவின் உலக சாதனை, 104 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி 37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Last Updated : Feb 15, 2017, 10:01 AM IST
இஸ்ரோவின் உலக சாதனை, 104 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது   title=

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி 37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில் பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம், 104 செயற்கைக்கோள்களை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் உள்ளிட்ட 104 செயற்கைக்கோள்கள் அடங்கும்.

அந்த செயற்கைக்கோள்கள் மூலம் வரை படப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்கு முன் 2014-ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 33 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதற்கு முன் 2016-ம் ஆண்டு, ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி, புவி சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது தான் உச்சபட்ச சாதனையாக கருதப்படுகிறது.

Trending News