ஜம்மு இளைஞர் சாதனை - ஒரே நாளில் 100 கி.மீ. ஓட்டம்!

ஸ்ரீநகர்-ஐ சேர்ந்த ஹமீத் அஜிஸ் என்ற 22-வயது தடகள வீரர் சுமார் 110 கி.மீ. தூரத்தினை 10 மணி 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். 

ANI | Updated: Nov 13, 2017, 12:08 PM IST
ஜம்மு இளைஞர் சாதனை - ஒரே நாளில் 100 கி.மீ. ஓட்டம்!
Pic Courtesy: @ANI

ஜம்மு: ஸ்ரீநகர்-ஐ சேர்ந்த ஹமீத் அஜிஸ் என்ற 22-வயது தடகள வீரர் சுமார் 110 கி.மீ. தூரத்தினை 10 மணி 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். 

ஒரே நாளில் 100 கி.மீ. தொலைவினை கடந்த, அம்மாநிலத்தின் முதல் நபர் எனும் சிறப்பினையும் அவர் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்; ’55 வயதான ஆஸ்திரேலியர் தான் என் முன்உதாரனமாய் கொண்டுள்ளேன். ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை உதவியால் பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றேன். இப்போது 180 கி.மீ. இடைவிடாது மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன். விரைவில் 303 கிமீ உலக சாதனையையும் முறியடிப்பேன்’ என ஹமித் அஜிஸ் தெரிவித்தார்!