ஜாட் ஒதுக்கீடு போராட்டம்: டெல்லி மெட்ரோ சேவை பாதிப்பு!!

இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டம் காரணமாக, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டத்தால் டெல்லியில் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated: Mar 19, 2017, 10:06 AM IST
ஜாட் ஒதுக்கீடு போராட்டம்: டெல்லி மெட்ரோ சேவை பாதிப்பு!!
Zee Media Bureau

புதுடெல்லி: இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டம் காரணமாக, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்த உள்ள முற்றுகைப் போராட்டத்தால் டெல்லியில் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய முடிவுகளுக்கும், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (மெட்ரோ ரயில்) ஞாயிறு இரவு 11.30 மணி வரை இருந்து டெல்லி வெளியே அனைத்து நிலையங்களில் இருந்து ரயில் சேவைகள் இடை நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி வெளியே மெட்ரோ ரயில்

டெல்லி போலீஸ் அதிகாரிகள் சொன்னபடி, மெட்ரோ சேவைகள் லைன் -2 ( குரு துரோணாச்சார்யா - ஹுடா சிட்டி சென்டர் ) லைன் -3 மற்றும் லைன் -4 ( கௌஷம்பி - வைஷாலி மற்றும் நொய்டா செக்டர் - 15 முதல் நொய்டா சிட்டி சென்ட்டர் ) மற்றும் லைன் -6 ( சாராய் -  எஸ்கோட்ர்ஸ் முஜேஸர் )  வரை மெட்ரோ சேவை இயங்காது. இந்த இடங்களில் மெட்ரோக்கள் இன்று மார்ச்- 19 இரவு 11:30 மணிக்கு பின் இயங்காது.

டெல்லி பகுதியில் மெட்ரோ ரயில்

மேலும், டெல்லி பகுதியில் பின்வரும் மெட்ரோ நிலையங்களில் மார்ச் 19 ம் தேதி 8:00 மணிக்கு மேல் இந்த இடங்களில் மூடப்பட்டு இருக்கும் - ராஜீவ் சவுக், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரேடேரியேட், உத்யோக் பவன், லோக் கல்யாண் மார்க், ஜன்பத், மண்டி ஹவுஸ், பாரக்கம்பா ரோடு, ஆர்.கே. ஆசிரமம் மார்க், பிரகதி மைதான், கான் மார்க்கெட் மற்றும் சிவாஜி ஸ்டேடியம்.

ஜாட் இனத்தைச் சேர்ந்த மக்கள், உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில் மறியல் தொடங்கி, பலவிதமான போராட்டங்களை நடத்திவரும் அவர்கள், வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்று, முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக, அறிவித்துள்ளனர்.

இதனால், டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில், நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்துவிதமான போக்குவரத்துகளையும் போலீசார் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தியுள்ளனர். மேலும், பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் எந்த விதத்திலும் டெல்லிக்குள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பாதுகாப்புப் பணியில் ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.