காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் இளம்பெண்கள்

Last Updated : Apr 26, 2017, 02:05 PM IST
காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் இளம்பெண்கள் title=

காஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்கள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தங்கள் கோபத்தை காட்டினர். ஆனால் தற்போது பள்ளி சீருடைகள் அணிந்த இளம் மாணவிகள் தங்களது கோபத்தை பாதுகாப்பு படை வீரர்களின் மீது கற்களை வீசி காண்பிக்க துவங்கியுள்ளனர்.

கடந்த வாரம் முதலே காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பாதுகாப்பு படைவீரர்களுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். போரட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் பரவலாக காணப்பட்டது.

இப்போரட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தாமாக முன்வந்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்து கைப்பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கினார். இதில் பல மாணவிகள் காயம் அடைந்தனர். தற்போது பெண்கள் பங்கேற்கும் போராட்டங்கள் காஷ்மீரில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே மாணவிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை அரசாங்கம் எல்லா பக்கங்களிலிருந்தும் நசுக்குகிறது. நடப்பதை கண்டு நாங்கள் எப்படி விலகி இருக்க முடியும். காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு வரும் காலம் வந்து விட்டது என மாணவி ஒருவர் கூறினார்.

Trending News