மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்

Mallikarjun Kharge, Congress : பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 9, 2024, 08:18 PM IST
  • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு
  • காங்கிரஸ் கட்சிக்கு முறையாக செல்லாத அழைப்பு
  • கடைசி நேரத்தில் கலந்து கொண்ட மல்லிகார்ஜூன கார்கே
மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் title=

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டிருக்கிறது. முறையாக அழைப்பு விடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி, பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்தது. இருப்பினும், பிரதான எதிர்க்கட்சி என்பதால், விழாவை புறக்கணிக்க வேண்டாம் என முடிவெடுத்தது. இதனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அவருடன் ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் யாரும் வரவில்லை. கார்கே மட்டும் வந்த நிலையில், அவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. அவருக்கு பின்னால் முகேஷ் அம்பானி, ஷாரூக்கான் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். 

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?

காங்கிரஸ் அதிருப்தி ஏன்?

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கு முதலில் அழைப்பு சென்றிருக்க வேண்டும். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியை பாஜகவின் முக்கிய தலைவர்கள் தரப்பில் இருந்து அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியே கூட நேரடி அழைப்பு விடுப்பார் என்றும் காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில், அப்படியான அழைப்புகள் ஏதும் செல்லவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். அவரிடம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் பங்கேற்குமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அப்படியான அழைப்பு ஏதும் தங்களுக்கு வரவில்லை, ஒருவேளை வந்தால் மூத்த தலைவர்கள் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். இதனிடையே தான் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பார்மாலிட்டிக்கு காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தான் அழைப்பு சென்றுள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது.  

காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு

அதனால், பிரதமர் மோடி உள்ளிட்ட புதிய பாஜக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்றே காங்கிரஸ் முடிவெடுத்து வைத்திருந்தது. இன்று மாலை வரை காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து யார் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்ற விவரம் தெரிவிக்கவில்லை. இதனால், காங்கிரஸ் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் என்றே எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மாலை 7 மணிக்கு கார்கே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். ஒருவேளை அழைப்பு முறையாக இருந்திருந்தால் ராகுல்காந்தி கூட கலந்து கொள்ள வாய்ப்பு இருந்ததாம். 

மேலும் படிக்க | PM Narendra Modi: பதவியேற்றார் பிரதமர் மோடி... கேபினட்டில் மொத்தம் 72 அமைச்சர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News