காணமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

Updated: Aug 11, 2017, 12:27 PM IST
காணமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

பீகார் மாநிலம் சியான் மாவட்டத்தில் 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்க பட்டுள்ளது. 

விசாரணையில் இவரது பெயர் விஷ்ணு ராஜ் குமார் எனவும், இவர் சர்சர் கிராமத்தில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 6ஆம் படித்து வந்தது தெரியவந்துள்ளது.

விஷ்ணு ராஜ் குமார் -ன் தந்தை ராஜ் குமார் பிரசாத், இதுகுறித்து கூறுகையில் மூடரு நாட்களுக்கு முன் தன் மகன் கடத்த பட்டதாகவும், தன் மகனை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் பணயதொகையாக கேட்க பட்டதாகவும் கூறினார்.

ஆனால், கடத்தியவர்கள் அதன்பின் தொடர்புகொள்ள வில்லை எனவும், இதுகுறித்து காவல் துறையிடம் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் காவல்துறையின் அலட்சியமே இதற்க்கு காரணமாக தெரிவித்தார்.