இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

Monkeypox in India: இந்தியாவில், குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 30, 2022, 04:58 PM IST
  • இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
  • கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை பாடாய் படுத்தியது.
  • தற்போது மங்கி பாக்ஸ் என்ற புதிய தொற்று உலக நாடுகளை பற்றிக்கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் title=

கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை பாடாய் படுத்தியது. உலகம் முழுவதும் நிலைமை சற்று சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வேளையில் மங்கி பாக்ஸ் என்ற புதிய தொற்று உலக நாடுகளை பற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை நான்கு பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்தியாவில், குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சனிக்கிழமை அறிவித்தார். கேரளாவை சேர்ந்த 35 வயதான நோயாளி, ஜூலை 12 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வந்தார். இந்தியா வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது சோதனை முடிவுகளில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அறிகுறி தென்பட்டதும், கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றது. 

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா? எப்படி பாதுகாப்பாக இருப்பது?

வீணா ஜார்ஜ் கூறுகையில், "முழு சிகிச்சை நெறிமுறையும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டது. மீண்டும் மீண்டும் பல முறை மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. தற்போது வரை அனைத்து மாதிரிகளும் இரண்டு முறை நெகட்டிவ்வாக வந்துள்ளன. நோயாளி பூரண குணமடைந்து நலமாக உள்ளார்.’ என்றார்.

துவக்கத்தில், தொற்று உறுதியான நபர் தனது தாய் தந்தையுடன் தன்னுடன் பயணித்த 11 பேருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது கவலை அளிக்கும் வண்ணம் இருந்தது. ஆனால் அனைத்து தொடர்புகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் உறுதியளித்தனர். இது அச்சங்களைப் போக்கியது. 

கேரள மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று உறுடி செய்யப்பட்ட மற்ற இருவரும் நிலையாக உள்ளதாகவும் அவர்கள் வேகமாக குணமடைந்து வருவதாகவும் வீணா ஜார்ஜ் கூறினார்.

மேலும் படிக்க | Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News