விரைவில் டெல்லி - மும்பை புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்?

Last Updated : Sep 19, 2017, 03:19 PM IST
விரைவில் டெல்லி - மும்பை புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்? title=

டெல்லியிருந்து மும்பைக்கு மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

தற்போது டெல்லியில் இருந்து மும்பைக்கு ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி, மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது. 
> அதில் ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி ரயில், டெல்லியிருந்து மும்பை செல்ல 17 மணி நேரம் ஆகிறது. 

> மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் 15 மணி நேரம் 35 நிமிடங்களில் டெல்லியில் இருந்து மும்பை வந்தடைகிறது. 

இந்நிலையில் தற்போது இன்னும் குறைந்த நேரத்தில் பயணிக்கும் வகையில் இந்திய ரயில்வே புதிய ரயிலை இயக்க திட்டமிட்டு வருகிறது. 

மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் வேகத்தை 89 கி.மீ வேகத்தில் இருந்து மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் புது எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த முயற்சிகள் மூலம் பயண நேரத்தை இன்னும் 2 மணி நேரம் குறைக்க வேண்டும் என்பதே நோக்கம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Trending News