மும்பை - கணவனை கொன்று Septic tank-ல் புதைத்த மனைவி!

கணவரின் இறந்த உடலினை செப்டிக் டேங்கினில் புதைத்து, பிறகு சிமெண்ட் கொண்டு அடையாளம் தெரியாமல் மூடியுள்ளனர்.

Updated: Dec 7, 2017, 05:48 PM IST
மும்பை - கணவனை கொன்று Septic tank-ல் புதைத்த மனைவி!
Pic Courtesy: PTI

மும்பை: மும்பையை சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் பெண்மனி ஒருவர், தன் கணவர் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்!

13 வருடங்களுக்கு முன்னதாக, தான் பாலியல் தொழில் செய்ய முற்பட்ட போது அதற்கு தடையாய் நின்ற அவரது கணவரை கொன்றுள்ளார்.

பின்னர் கொன்ற உடலை மறைப்பதற்காக வீட்டின் அருகில் இருந்த செப்டிக் டேங்கில் எறிந்துள்ளார். சமீபத்தில் அவரது வீட்டினில் காவல்துறையினர் ரெய்டு நடத்தி போது அவரது கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளாது.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் 42 வயதான சவிதா பாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2014-ஆம் ஆண்டில், சவிதா தனது கணவர் சஹ்தேவை தனது காதலன் கமலேஷு உதவியுடன் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் கணவரின் இறந்த உடலினை செப்டிக் டேங்கினில் புதைத்து, பிறகு சிமெண்ட் கொண்டு அடையாளம் தெரியாமல் மூடியுள்ளனர்.!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close