மகாத்மா காந்தி சிலையையும் விட்டு வைக்காத மர்ம நபர்கள்!

லெனின், பெரியார், அம்பேத்கர் சிலைகளை தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. 

Updated: Mar 8, 2018, 10:41 AM IST
மகாத்மா காந்தி சிலையையும் விட்டு வைக்காத மர்ம நபர்கள்!
ANI

லெனின், பெரியார், அம்பேத்கர் சிலைகளை தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம் கண்ணூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. 

இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது.