கழிவு சுத்திகரிப்பிற்காக புதுதிட்டம்: ஆந்திரா முதல்வர் துவங்கினார்!

Updated: Oct 11, 2017, 05:33 PM IST
கழிவு சுத்திகரிப்பிற்காக புதுதிட்டம்: ஆந்திரா முதல்வர் துவங்கினார்!
Pic Courtesy: @ANI

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.

இந்த 30 இயந்திரங்களில் கழிவு சேகரிப்பு லாரிகள், மரம் கத்தரித்து இயந்திரங்கள், சாலை துப்புரவு மற்றும் இதர துப்புரவு இயந்திரங்கள் என மொத்தம் 30 இயந்திரங்கள் அடங்கும்.

 

 

விஜயவாடா மற்றும் குண்டூர் மாநகராட்சி கழகங்களில் இந்த வாகனங்கள் செயல்படும் எனவும் விசாகப்பட்டினம், அமராவதி மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் இதேபோல் இயந்திரங்கள் இயக்கப்படவுள்ளது எனவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.