இந்திய ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது

இந்தியாவில் இப்போது ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, கும்பல் தாக்குதல் ஆதிக்கம் செலுத்த முடியாது என காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் திரிவேதி விமர்சனம்!

Last Updated : Jul 20, 2018, 09:12 PM IST
இந்திய ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது title=

21:11 20-07-2018

மீண்டும் லோக்சபாவிற்கு வந்தார் பிரதமர் மோடி இன்னும் சில நிமிடங்களில் உரையாற்ற வாய்ப்பு!


20:10 | 20-07-2018

இந்தியாவில் இப்போது ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, கும்பல் தாக்குதல் ஆதிக்கம் செலுத்த முடியாது. மகாபாரதத்தில் கவுரவர்களிடம் பலமிருந்தது, ஆனால் பாண்டவர்களிடம் உண்மையிருந்தது. இத்தீர்மானம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என்பது நம்முடைய கடமையாகும். "இந்து-முஸ்லிம், இந்தியா-பாக்கிஸ்தான்" என்ற சொற்களால் அரசாங்கம் நடக்கிறது என விமர்சனம் செய்தார். மக்களவையில் பாரதீய ஜனதாவிற்கு பெரும்பலம் உள்ளது, அதனை குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் திரிவேதி விமர்சனம்! 


19:20 | 20-07-2018

நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை. 015ஆம் ஆண்டு பேரிடர், வர்தா புயல் பாதிப்புகளுக்கு ஏற்ப தேவையான நிதி கிடைக்கவில்லை. தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது என்றும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரி பங்குத்தொகையை வழங்க வேண்டும் என்றும் அதிமுக எம்பி ஜெயவர்தன் மக்களவையில் பேச்சு! 


18:16 | 20-07-2018

பிரதமர் மோடிக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக கூறி ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரஹலாத் ஜோஷி! 


16:47 | 20-07-2018

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவில்லை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பேச்சு! 


15:00 | 20-07-2018

 நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் மாலை 6.30 மணிக்கு பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!


14:42 | 20-07-2018

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வேணுகோபால் அதிமுக எம்பி பேச்சு; தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்ததற்கு நன்றி. காவிரியில் கர்நாடகா முறையாக நீரை திறந்துவிட ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


14:17 | 20-07-2018

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு!!


14:08 | 20-07-2018

ஆவேச உரையாடலுக்கு பின் மோடியை கட்டியணத்த ராகுல்காந்தி!!

பிரதமர் வித்தியாசமான அரசியல்வாதி -ராகுல்காந்தி! 

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்கள் எதுவும் பேச முடியவில்லை. நான் நன்றாகப் பேசுவதாக பாஜக எம்பிக்கள் சற்றுமுன் என்னிடம் கூறினர். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது, பிரதமர் மெளனம் காக்கிறார் -ராகுல்காந்தி!


13:56 | 20-07-2018

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆட்சியின் போது அதிகரித்துள்ளது. நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சர் ஒவ்வொருவருக்கும் தொடர்பு இருக்கும் பொது பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? -ராகுல்காந்தி


13:53 | 20-07-2018

மக்களவை அமைதியாக நடத்த காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். அவையில் ஒரு உறுப்பினர் பேசும்போது, அதற்கு பதிலளிக்க அமைச்சருக்கு உரிமையுண்டு என  சுமித்ரா மகாஜன் அறிவுறுத்தல்.


13:41 | 20-07-2018

ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 1.45 வரை ஒத்திவைப்பு! 


13:18 | 20-07-2018

நான் பிரதமரில்லை; பிரதம சேவகன் என்றார் மோடி -ராகுல்காந்தி!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப்பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்க வேண்டும் என ஆவேச கேள்விகளுடன் ராகுல்காந்தி!!

அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் 

மட்டுமே அளித்துள்ளார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. 

விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி பாஜக மீது சரமாரி விமர்சனம்.


12:55 | 20-07-2018

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு இல்லை- மைத்ரேயன் காங்கிரசும், திமுகவும் ஆதரிக்கும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கிடையாது-மைத்ரேயன்


12:18 | 20-07-2018

திருப்பதி பாலாஜி முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை கூட மோடி நிறைவேற்றவில்லை. டெல்லியை விட சிறப்பான தலைநகர் ஆந்திராவுக்கு உருவாக்கப்படும் என்றார் மோடி. ஆந்திராவின் தேவையில் 2% நிதியை ஒதுக்கிவிட்டு, எல்லா வாக்குறுதியும் நிறைவேறிவிட்டதாக மோடி கூறுகிறார். 

ஜனார்த்தன ரெட்டி குடும்பத்திற்கு கர்நாடகாவில் பாஜக போட்டியிட சீட் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இது தான் எனவும் கல்லா எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவதே இல்லை என ஜெயதேவ் கல்லா தெரிவித்துள்ளார்.  


11:17 | 20-07-2018

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது பிஜூ ஜனதா தளம் எம்.பி.கள் 19 பேர் வெளிநடப்பு!!


11:14 | 20-07-2018

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு துவக்கம்! 


10:43 | 20-07-2018

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக டிடிபி கட்சி எம்பி ஜெயதேவ் கல்லா முதலில் பேசுகிறார். பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகேஷ் சிங், அர்ஜூன் மேக்வால் பதிலளிக்கின்றனர். மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுகிறார். 


மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது. 

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முத்தலாக உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கிடையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தது.

இந்நிலையில் இந்த தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனவும், முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 7 மணி நேரம் நடக்க உள்ள இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க அரசு பேச 3.5 மணி நேரமும் காங்கிரசுக்கு 38 நமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு முதலில் கோரிக்கை வைத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பின்னர் மல்லிகார்ஜுனாவும் பேசவுள்ளனர். 

கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மோடி தலைமையிலான ஜனநாயக கூட்டணி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News