விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை!

Updated: Sep 13, 2017, 10:23 AM IST
விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை!

ஒருமித்த கருத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் 1 வாரத்தில் விவாகரத்து.

இந்திய திருமண சட்டத்தின்படி விவாகரத்து கோரும் தம்பதியினர், தங்களது விவாகரத்திற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டும்.

இந்த 6 மாதகால இடைவெளியினில் அவர்களுக்குள் பரஸ்பரம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்வதற்கான மனமாற்றம் நிகழலாம் என்பதே இந்த அவகாசத்தின் நோக்கமாகும்.

ஆனால் 8 ஆண்டு காலமாக பிரிந்து வாழும் ஒரு தம்பதியனரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் நேற்று மாறுபட்ட கருத்துடன் தங்களது தீர்ப்பினை அளித்துள்ளனர்.

"ஏற்கனவே 8 வருடமாக பிரிந்து வாழும் நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்கிறபோது விவாகரத்து வழங்குவதற்கு 6 மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்பதில்லை" என்று தெரிவித்தனர்.

மேலும் பிரிந்து வாழ்கின்ற தம்பதியர்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து இருக்கும் பட்சத்தில், பிரிந்து வாழ முடிவு எடுத்து விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர், இந்த 6 மாத கால காத்திருப்பு அவகாசத்தை ரத்து செய்து விடுமாறு கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.