பாகிஸ்தான் அத்துமீறல்: 1700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

Last Updated : May 17, 2017, 10:59 AM IST
பாகிஸ்தான் அத்துமீறல்: 1700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! title=

ஜம்மு - காஷ்மீரில் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1700 பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது:-

இன்று காலை 5 மணியளவில் பாலகோட் பகுதிக்கு உட்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேவுள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

ரஜோரி பகுதியிலும் நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் தாக்குதலில் ஈடுபட்டனர். நவுசேரா பகுதியிலும் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய தாக்குதல் இரவு 9 மணி வரை நீடித்தது.

இவ்வாறாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகாமையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 10000 மக்கள் பீதியில் உள்ளனர். ஏற்கெனவே நவ்சேரா பகுதியில் நடத்தப்பட்ட பாகிஸ்தான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 1700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பகுதிகளிலும் இந்திய தரப்பும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது" என்றார்.

Trending News