இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல்முறையாக இந்தியா வருகை!

டெல்லி விமான நிலையம் வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மோடி வரவேற்றார்.

Updated: Jan 14, 2018, 02:55 PM IST
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல்முறையாக இந்தியா வருகை!
ZeeNewsTamil

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

நேதன்யாகு முதலில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கிறார். அதன்பிறகு இன்று இரவு பிரதமர் மோடி அவருக்கு விருந்தளிக்க உள்ளார்.

15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும்.