ராஜஸ்தானில் கால்நடை கடத்திய மூன்று பேர் கைது!

ராஜஸ்தானில் பரத்பூர் சோதனை சாவடி வழியாக, கால்நடைகளை கடத்தி வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

Updated: Feb 9, 2018, 12:12 PM IST
ராஜஸ்தானில் கால்நடை கடத்திய மூன்று பேர் கைது!
ANI

நாடு முழுவதும் இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. என்னினும் இந்த உத்தரவை கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தானில் பரத்பூர் சோதனை சாவடி வழியாக, கால்நடை களை கடத்தி வந்த வேனை, காவல் துறையினர் பிடித்தனர். 

நேற்று நள்ளிரவு, ராஜஸ்தான் மாநிலத்தில் லாரிகளில் இருந்து மாடுகளை ஏற்றி பரத்பூர் சோதனை சாவடி வழியாக சென்ற போது வேனின் பின்னால், வேனில் மாடுகள் செல்வதை பார்த்து, காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது மாடுகளுக்கு உரிய எந்த ஆவணமும் இல்லை என்று கண்டுபிடித்தனர்.

பின்னர், கால்நடைகளை கடத்தி வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.