இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த நவ்ஜோத் சித்து

பாரதீய ஜனதா கட்சிக்கு பதிலடி தந்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்து

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 03:56 PM IST
இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த நவ்ஜோத் சித்து title=

கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் பிரதமர் வேட்பாளரான இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய பிரதமாராக பதவியேற்ற விழாவில் முன்னால் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து சென்றிந்தார்.

அந்த விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துகொண்டார். பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கான் அமர்ந்திருந்த முன் வரிசையில் சித்தும் அமர்ந்திருந்தார். இந்த சம்பவங்களுக்கு சமூக வலைதளங்களில், குறிப்பாக பா.ஜ. கட்சியை சேர்ந்தவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர். இதுக்குறித்து தொலைகாட்சிகளிலும் விவாதங்கள் நடைபெற்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது, கடந்த காலத்தில் இரு நாடுகளும் சமாதானத முயற்சிகளுக்காக வாஜ்பாய் ஜி "லாகூர் வரை பஸ்ஸில் பயணம் செய்தார். அதில் முஷாரஃப் இருந்தார். மோடி பிரதமராக பதவியேற்ற போது நவாஸ் ஷரிஃபை அழைத்திருந்தார். ஒருநாள் திடீரென லாகூர் சென்றார் பிரதமர் மோடி. ஆனால் யாரும் அவரிடம் கேள்வி கேட்கவில்லை என்றார்.

அங்கு சென்றது எந்தவித அரசியல் காரணமும் இல்லை. நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்தது என்பது உணர்வு பூர்வமான நிகழ்ச்சியே எனக் கூறினார். அதேபோல முன்வரிசையில் மசூத் கானுடன் அமர்ந்திருந்தது, பதவியேற்ப்பி விழா தொடங்குவதற்கு முன்பாக எனது இடம் மாற்றப்பட்டு, முன் வரிசையில் இடம் ஒதுக்கியதால், அங்கு அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என தன் மீதான விமர்சனத்தை குறித்து விளக்கம் அளித்தார்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்த செயலை தவிர்த்து இருக்கலாம். இதனால் அவர் மக்களிடம் நம்பிக்கையை இழந்து உள்ளார் எனக் கூறினார். 

இதற்கு பதில் அளித்த நவ்ஜோத் சிங் சித்து கூறியது, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்தது என்பது உணர்வு பூர்வமாக நடந்த நிகழ்ச்சியே. இதில் சதி ஒன்றும் ஒன்றும் இல்லை. கட்டி அணைத்ததை பெரிய விசியமாக பேச, அது ஒன்றும் ரபேல் ஒப்பந்தம் இல்லை. இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அப்பொழுது இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கி கொள்கிறார்கள் அல்லது கட்டி பிடித்துக் கொள்கிறார்கள். அது தவறா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

Trending News