தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுலின் போட்டோ வைரல்!!

Updated: Oct 12, 2017, 01:31 PM IST
தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுலின் போட்டோ வைரல்!!

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார்.

அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள், ராகுல் பெண்கள் கழிவறைக்குள் சென்றதை கண்டு, வேகமாக ஓடி சென்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.

 

 

ராகுல், பெண்கள் கழிவறையில் இருந்து வெளியேறும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.