இரட்டைக்கொலை வழக்கில் அரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் தண்டனை

இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2018, 03:00 PM IST
இரட்டைக்கொலை வழக்கில் அரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் தண்டனை title=

இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இரண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் டெல்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார். இரண்டாவது உ..பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார். 

இதை வழக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அரியானாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 26 பேர் குற்றவாளிகள் என இறுதி தீர்ப்பு வழங்கியது. 

இதனையடுத்து இன்று, அந்த தீர்ப்பின் மீது தண்டனை அளிக்கப்பட்டது. அதில் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படுவதாக கூறி ஆயுள் தண்டனை வழங்கியது. ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. 

Trending News