ஹாதியா வாழ்கையில் தலையிட கேரள HC-க்கு அதிகாரம் இல்லை - SC!

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட LoveJihad வழக்கில் ஹாதியா மற்றும் ஷபீன் ஜகான திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியா-வுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளத!

Updated: Mar 8, 2018, 04:18 PM IST
ஹாதியா வாழ்கையில் தலையிட கேரள HC-க்கு அதிகாரம் இல்லை - SC!

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட LoveJihad வழக்கில் ஹாதியா மற்றும் ஷபீன் ஜகான திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியா-வுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளத!

கேரளாவை சேர்ந்த ஹாதியா-வாக மதம் மாறிய அகிலா என்ற இளம்பெண் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக ஷபின் ஜஹான் என்பவர் மீது அகிலாவின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஜஹான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கு  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, "தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஹாதியா தெரிவிக்கையில் அதனை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தால் எப்படி முடியும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஹாதியா மேஜர் என்னும் பட்சத்தில் அவர் தான் யாருடன் செல்ல வேண்டும் என்பதை தான் முடிவு செய்ய வேண்டும். 

ஹாதியாவின் முடிவில் கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. அதேப்போல் ஹதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை. எனவே ஹாதியாவின் திருமண நோக்கம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு (NIA) தலையிட இயலாது" என தெரிவித்தது. 

அதைதொடர்ந்து ஹாதியா "நான் இஸ்லாமிய பெண், இஸ்லாமிய பெண்ணாகவே என் கணவருடன் வாழ விரும்புகின்றேன்" என்று பிப்ரவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஹதியா திருமணம் செல்லாது என கேரள நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும்,  ஹாதியா மற்றும் ஷபீன் ஜகான திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியா-வுக்கு உரிமை உண்டு தெரிவித்துள்ளது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close