சீனியருக்கு மசாஸ் செய்யும் ஜூனியர் -வைரல் வீடியோ

அலுவலகத்தில் பணிபுரியும் சீனியருக்கு மசாஸ் செய்யும் ஜூனியர் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated: Feb 9, 2018, 09:23 AM IST
சீனியருக்கு மசாஸ் செய்யும் ஜூனியர் -வைரல் வீடியோ
Pic Courtesy : Youtube

அகோலா சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூத்த டைப் ரைட்டர் நிரஞ்சன் காதாரே, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவரது ஜூனியர், அவருக்கு மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த காட்சி கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைக்குறித்து கொத்வாலி போலிஸ் நிலையத்தில் டைப் ரைட்டர் நிரஞ்சன் காதாரே எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இவர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் ஆபாசம் தொல்லை தந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து மூத்த டைப் ரைட்டர் நிரஞ்சன் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

வீடியோ:-

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close