ஆசிரியர் அடித்ததில் தன் இடது காதை இழந்த மாணவர்!

பாட புத்தகம் எடுத்துவரவில்லை என ஆசிரியர் அடித்ததால், மாணவர் ஒருவரின் இடது செவி செயலியந்தது!

PTI | Updated: Feb 13, 2018, 02:36 PM IST
ஆசிரியர் அடித்ததில் தன் இடது காதை இழந்த மாணவர்!
Representational image

பாட புத்தகம் எடுத்துவரவில்லை என ஆசிரியர் அடித்ததால், மாணவர் ஒருவரின் இடது செவி செயலியந்தது!

மகாராஷ்டிர மாநிலம் நலசோபர பகுதியில் 8 வகுப்பு மாணவர் ஒருவர், வகுப்பிற்கு பாடபுத்தகம் இல்லாமல் வந்ததால் அவரை தண்டிக்க ஆசிரியர் அவரை அடித்துள்ளார். இதனால் அவரது இடது செவி செயலிழந்துள்ளது.

கடந்த பிப்., 2 ஆம் நாள் இச்சம்பவம் நடத்துள்ளது. எனினும் நேற்றைய தினமே இந்த விவகாரம் பூதகாரமாக உருவெடுத்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது புகார் அளிக்கப்பட்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமினில் அவர் தற்போது வெளிவந்துள்ளார்.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளியில் இருந்து திரும்புகையில், காதில் ரத்தம் வழிய வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் விஷயமறிந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!