விவேகானந்தர் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

இன்று விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. 

Last Updated : Jan 12, 2018, 04:29 PM IST
விவேகானந்தர் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்  title=

சுவாமி விவேகானந்தர் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. 1893-ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

1892-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர், கடல் நடுவில் அமைந்துள்ள ஒரு பாறை மீது 3 நாட்கள் தியானம் செய்தார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

இவரது பிறந்தநாளான தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு கடந்த 1984-ம் ஆண்டு அறிவித்தது. அன்று முதல் ஆண்டுதோறும் சனவரி 12-ம் நாள் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

இதனையடுத்து, பிரதமர் மோடி விவேகானந்தரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் விவேகானந்தருக்கு நான் தலைவணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று புதிய இந்தியாவை உருவாக்கும் நம் நாட்டின் இளைஞர்களையும் வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Trending News