அதிர்ச்சி: உ.பி பெண்கள் வாழ்வதற்கான இடம் இல்லை!

ANI | Updated: Aug 12, 2017, 11:23 AM IST
அதிர்ச்சி: உ.பி பெண்கள் வாழ்வதற்கான இடம் இல்லை!
Representational pic

உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மேலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பரேலி-யில், வீட்டில் தூங்கிகொண்டிருந்த சகோதிரிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குல்ஷன் (18), பய்சா (17) என்ற சகோதிரிகள் வீட்டில் தூங்கிகொண்டிருந்த பொது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூட்டிருந்த கதவை திறந்து அவர்களின் படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளார். சம்பவத்தின் பொது விழித்து கொண்ட பய்சா கூச்சலிட மரமநபர் தப்பியோடினர்.

தீ காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அவர்களது பெற்றோர் அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தால் பய்சாவின் பகுதியளவு உடல் தீக்கு இரையானது, குல்ஷன் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.