வீடியோ: டோல் பிளாசா பெண் ஊழியரை தாக்கிய மனிதர்!

பெண் ஊழியர் ஒருவரை, பயணி ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANI | Updated: Dec 7, 2017, 03:05 PM IST
வீடியோ: டோல் பிளாசா பெண் ஊழியரை தாக்கிய மனிதர்!
Screen Grab (Twitter)

ஹரியானா மாநிலம் குருகிராமில் டோல் பிளாசா பெண் ஊழியர் ஒருவரை, பயணி ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் தெரிவிக்கையில், அவரை தாக்க முயன்ற நபர், தான் ஒரு உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் அதனால் தன்னை கட்டணமின்றி டோல் பிளாசாவே கடக்க அனுமதிக்குமாறு கோரினார். ஆனால் அதற்கான ஆவணங்களைக் காட்டும்படி அவரிடம் கேட்ட போது, கண்பிக்க மறுத்து பதிலாக என்னை அடித்து விடுவேன் எனவும், தவறாகப் பேசினார். என்னை கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினார்" என தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் தாக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.