தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வரும் Walmart-Flipkart!

ப்ளிப்கார்ட்-வால்மார்ட் நிறுவனத்தின் ஒப்ந்தத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வருகின்றது!

Updated: Jun 12, 2018, 12:36 PM IST
தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வரும் Walmart-Flipkart!
Representational Image

ப்ளிப்கார்ட்-வால்மார்ட் நிறுவனத்தின் ஒப்ந்தத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வருகின்றது!

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக சில்லரை வர்த்தகத்திற்கான அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

முன்னதாக ப்ளிப்கார்ட் நிறுவனத்தினை உலகின் மிகப் பெரிய ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் கையகப்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியானது. இந்த கையகப்படுத்துதலின் மதிப்பு சுமார் 1,07,644 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ப்ளிப்பாகர்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் போட்டியிட்டன. இந்த போட்டியில் வால்மார்ட் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

2007-ம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் என்பவர்களால் பிளிப்கார்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை இடம் பெங்களூரில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட இ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட் படிப்படியாக முன்னேறி, இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்தது. 

கடந்த இரண்டு வருடமாக வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து முழு விவரங்கள வெளியாகியுள்ளன. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ 1,07,644 கோடி 

இதன் மூலம் இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் களமிறங்குகிறது. இ-காமர்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசான் அமெரிக்காவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close