வீடியோ: குஜராத்தில் ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதல்! 3-பேர் காயம்!

குஜராத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஆட்டோ மீது கார் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயம்!

Updated: Jun 13, 2018, 04:09 PM IST
வீடியோ: குஜராத்தில் ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதல்! 3-பேர் காயம்!

குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் ஆட்டோ தலை குப்பர விழுந்து நசுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவின் அருகில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணையில், தீடிரென கார் தனது செயல்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நிகந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

இந்த காட்சிகள் தற்போது அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. அவற்றின் காட்சிகள் இதோ!