வீடியோ: பெண்ணின் உயிரை காப்பாற்றிய வீரர் - பாராட்டிய அமைச்சர்

ரயில் நிலையத்தில் ஏற முயன்ற போது, கால் நழுவி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 16, 2018, 06:57 PM IST
வீடியோ: பெண்ணின் உயிரை காப்பாற்றிய வீரர் - பாராட்டிய அமைச்சர்
Pic Courtesy: twitter/PiyushGoyal

அரசாங்கம் விபத்துக்களை குறித்து பல விழிப்புணர்வுகளை செயல்படுத்தி வந்தாலும், அவ்வப்போது கவனக் குறைவினாலும், அவசாரத்தினாலும் பல விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பல உயிர்களை இழந்துக்கொண்டும் தான் இருக்கிறோம். விபத்துக்கள் ஏற்படும் போது, அவர்களின் உயிர்களை துணிந்து காப்பாற்றிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. 

அந்தவகையில், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரயில்வே பாதுகாப்பு படையை (RPF) சேர்ந்த ஒரு சிப்பாய், ரயில் ஏற முயன்ற போது, கால் நழுவி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமியை காப்பாற்றிய வீரரின் பெயர் சச்சின் போல் என்றும், அவர் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை சேர்ந்த வீரர் எனவும் அடையாளம் காணப்பட்டார்.

இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைத்துள்ள மகாலஷ்மி ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்ளில் வைரலானதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில், இச்சம்பவத்தின் 1.33 நிமிடம் கிளிப்பைப் பகிர்ந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:- "சச்சின் போலின் மனதைரியம் பாராட்டக்கூடியது. அவரால் மகாலஷ்மி ரயில் நிலையத்தில் உயிர் காப்பாற்றப்பட்டது. மகாராஷ்டிரா பாதுகாப்பு படையின் ஜவானைப் பற்றி நாம் பெருமையடைகிறோம்" எனக் கூறியுள்ளார். 

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close